மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிவிசால நிலப்பரப்பை கொண்ட எழில் மிகு வாவி சூழ்ந்த மாந்திவில் உள்ளடங்கியிருக்கும் மறுமம்தான் என்னவோ என மக்களால் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு போதன வைத்தியசாலையின் ஒரு பிரிவாகிய தொழு நோயாளர்களுக்கான சிகிச்சை அளிக்கப்படும் வைத்தியசாலையே இந்த மாந்திவிலில் மறைந்திருக்கும் அதிசயமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது.
தொழு நோய் என்பது ஒரு தொற்று நோயாகவும் அதை கட்டுப்படுத்த முடியாத நோயாகவும் கடந்த காலங்களில் இருந்து வந்தமையினால் மக்கள் குடியேற்றம் அற்ற இத் தீவினை சுகாதார அமைச்சு தேர்ந்தெடுத்து இருநூறுக்கும் மேற்ப்பட்ட தொழு நோயாளர்களுக்கு சிக்சை அளிக்கும் வசதி கொண்ட விடுதிகளுடன் கூடியதாக இவ் வைத்தியசாலை ஆரம்பிக்கபட்டிருந்தது.
தற்போதைய விஞ்ஞான உலகில் நோய்களுக்கான மருந்து வகைகளை புதிது புதிதாக கண்டு பிடிப்பது மட்டும் அல்லாது தொழு நோயினை முற்று முழுதாக வீட்டில் இருந்தவாறே கட்டுப்படுத்த கூடிய அதி நவீன மருத்துவ வகைகள் கண்டு பிடிக்கபட்டதன் பின்னர் தற்போது குறித்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே இருந்த வண்ணமே தமக்கான சிகிச்சையினை பெற்றுக் கொண்டு குணமடையலாம் என தற்போதைய விஞ்ஞான உலகம் கூறிநிற்கின்றது.
இதன் அடிப்படையிலோ என்னமோ இருநூறிற்கு மேற்ப்பட்ட தொழு நோயாளர்கள் தரித்து நின்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக ஒரே ஒரு நோயாளர் மாத்திரமே அத்தீவில் சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகின்றது.
இங்கு சிகிட்சை பெற்று வரும் ஒரு நோயாளிக்காக கடந்த பல வருட காலமாக நாளந்தம் 20-க்கு மேற்ப்பட்ட அரச சேவையிலுள்ள சுகாதார பணியாளர்கள் கடமையில் ஈடுபட்டுவருவதையும் அறிய முடிகின்றது.
மட்டக்களப்பு மாநகரத்தின் எழில் மிகு தீவாக மட்டக்களப்பு மண்ணின் சொத்தாக திகழ்ந்து கொண்டிருக்கும் இத் தீவினை பாரியதொரு சுற்றுலா மையமாகவோ அல்லது பல தடவைகள் மட்டக்களப்பு சிறைச்சாலை தேவைக்காக கோரப்பட்டமைக்கு அமைவகவோ இத் தீவினை எமது மாவட்டத்தின் எதிர் கால அபிவிருத்திக்கு ஏற்றவாறு குறித்த தீவினை எதிர் காலத்தில் மாற்றியமைக்கும் வண்ணம் செயற்ப்படாமல் , தொடர்ந்தும் ஊடகங்களுக்கும் அங்கு செல்ல அனுமதியளிக்கப்படாத மறுமமான தீவாகவே இத்தீவு இருந்து வருகின்றது என மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஒரேயொரு நோயாளிக்காக பல இலட்சக்கணக்கான சம்பளத்தினை வீண்விரயம் செய்வதை விடுத்து. இங்கு கடமையாற்றும் 20-இற்க்கு மேற்ப்பட்ட அரச பணியாளர்களை மட்டக்களப்பு போதன வைத்தியசாலையின் கடமைக்கு அமர்த்தலாம் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.