தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். மேலும் வரும் ஜூன் 22-ம் தேதி விஜயின் பிறந்த நாளை கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ஆனால் விஜய் பிறந்த நாளை கொண்டாடும் மூடில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆம் விஜய் இந்த வருடம் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடப்போவது இல்லையாம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இதனால் அவர்களது குடும்பம் சோகத்தில் கதறி கொண்டிருக்கும் வேலையில் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட விஜய்க்கு மனம் இல்லையாம்
இதனால் இந்த வருஷம் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இது ஆவலுடன் இருந்த அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.