சென்னை: திருமணம் செய்து கொள்ள அனுஷ்கா சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்காவுக்கு 37 வயதாகிறது. அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் விரும்புகிறார்கள்.
அனுஷ்காவோ படங்களில் பிசியாக இருப்பதாகக் கூறி வந்தார். இருப்பினும் அவரின் பெற்றோர் மாப்பிள்ளை தேடுவதை மட்டும் கைவிடவில்லை.
பிரபாஸ்
காதல்
அனுஷ்காவும், பிரபாஸும் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் பிரபாஸோ அனுஷ்கா நல்ல நண்பர் மட்டுமே என்று கூறிவிட்டார். பிரபாஸ் வீட்டில் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அனுஷ்கா
திருமணம்
இத்தனை ஆண்டுகளாக திருமண பேச்சை எடுத்தால் பிடிகொடுக்காமல் பேசிய அனுஷ்கா தற்போது சம்மதம் தெரிவித்துள்ளார். மகள் ஓகே சொன்ன கையோடு அவருக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று அவரின் பெற்றோர் தீர்மானித்துள்ளனர்.
மாப்பிள்ளை
டும் டும் டும்
அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை தேடும் வேலை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டே அனுஷ்காவுக்கு திருமணம் நடக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
கோவில்
தோஷம்
ஜாதகத்தில் தோஷம் இருந்ததால் தான் அனுஷ்கா கோவில் கோவிலாக ஏறி இறங்கியதாக தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் கூறப்பட்டது. அனுஷ்காவுக்கு கடந்த 2 ஆண்டுகளாக மாப்பிள்ளை தேடி வருகின்றபோதிலும் அவருக்கு ஏற்றவர் இன்னும் கிடைக்கவில்லையாம்.