மனோஜ் குமார் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்து வரும் படம் வெல்வெட் நகரம். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் சேர்த்து மோஷன் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள். போஸ்டரில் வரலட்சுமி வித்தியாசமாக உள்ளார். போஸ்டரை பார்த்த தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
வெல்வெட் நகரம் போஸ்டர் சூப்பராக உள்ளது என்று கூறி ட்வீட்டியுள்ளார் விஷால். மேலும் படக்குழுவுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விஷால் வாழ்த்தி ட்வீட்டியதை பார்த்த வரலட்சுமி மகிழ்ச்சி அடைந்து அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
விஷால் நடித்துள்ள ”சண்டக்கோழி 2” படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காதலர்கள் என்று கிசுகிசுக்கப்படும் அவர்கள் படத்தில் மோதிக் கொள்வார்களாம்.
மேலும் விஷாலும், வரலட்சுமியும் பிரிந்துவிட்டதாக பேசப்பட்டது. இந்நிலையில் வரலட்சுமி தான் தனது நாடி, நரம்பு என்று கூறி காதல் இன்னும் இருக்கிறது என்பதை விஷால் அண்மையில் உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.