நெல்லிக்காய் பழங்களையுயும் மிஞ்சும் அளவுக்கு சத்து உடையது, ஆயுளை அதிகரிக்கும். வைட்டமின் சி சத்தும் புத்தியை வளர்க்கும் பாஸ்பரஸ்சத்தும் மிக்கது.
** சுத்தமான நல்ல தண்ணீரில் இரண்டு நெல்லிக்காய்களை போட்டு ஊற வைத்து அந்த தண்ணீரை எடுத்து கண்களை நன்கு கழுவினால், கண்சிவந்து புண்ணாகுதல் முதலிய வியாதிகளை இது குணப்படுத்தும்.
** நெல்லியில் உடலுக்கு அவசியமான பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் முதலியவை அதிகளவில் உள்ளதால் உடலுக்கு வலிமை கிடைக்கின்றது.
** உயிர்ச் சத்தான வைட்டமின் ‘சி’ சத்து இதில் நிறைந்துள்ளதால் இந்திய மருத்துவத்தில் உபயோகிக்கப்படுகின்றன.
** பட்டை, வேர்,இலைகள், மலர்கள் மற்றும் அனைத்தும் மருத்துவப்பயனுள்ள பகுதியாகும். இலைகளின் சாறு நாட்பட்டபுண்களுக்கு பூசப்படுகிறது. வடிசாறு வெங்காயத்துடன் கலந்து வயிற்றுப் போக்கினை தீர்க்கும்.
** பட்டையும், வேரும் சதை இறுக்கும் தன்மைகொண்டவை. சிறுநீரகக்கோளாறு, இரத்தச்சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரணநோய்களுக்கு நன் மருந்தாகிறது.
** சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற நெல்லிக்காய் உதவும்.
** நெல்லிப்பழங்களை விதைநீக்கி இடித்துச் சாறு பிழிந்து சமஅளவு சர்க்கரைசேர்த்து மணப்பாகு தயார்செய்து அருந்த கப சம்பந்தமான நோய்களும், பித்தசம்பந்தமான நோய்களும் தீருவதுடன் அதிக உளைச்சலினால் ஏற்படும் கைநடுக்கம் குணமாகிறது.
** நெல்லிப்பழத்தில் முழுமையும் மரம் பயன்பட்டு சிறப்படைவது போன்று மனித உடல் முழுவதும் பரவி, ஆரோக்கியமும், நீண்டஆயுளும் நெல்லிக்காய் தருகிறது.
** நெல்லிக் கனி எல்லாமே நீர்ச்சத்து மிகுந்தது. மருத்துவகுணமும் கொண்ட இதனை நன்றாக மென்று தின்னவேண்டும். அதனால் பற்களும், ஈறுகளும் பலப்படுத்துவதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்கும். <