பெண் அழகு:திடீரென்று பயணம் செய்ய வேண்டி வரும்போது, அல்லது ஏதேனும் முக்கியமான விழாக்களுக்குச் செல்ல வேண்டி வரும்போது, எப்பிலேட்டர்கள் (ரோமங்களை அகற்றும் கருவி) தான் அவசரத்திற்குக் கைகொடுக்கும்! அந்தரங்கப் பகுதிகளிலும் அசௌகரியமான பகுதிகளிலும் இருந்து ரோமங்களை அகற்றுவது என்பது வலி மிகுந்த, சிரமமான காரியம்! இதனை இன்னும் எளிதாகவும் வலி குறைவாகவும் செய்வதற்கு சில குறிப்புகள் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன:
ஈரத்தில் அகற்றுவதும் உலர்ந்த பிறகு அகற்றுவதும் (Wet or Dry)
இதுவரை நீங்கள் எப்பிலேட்டர் பயன்படுத்தவில்லை, இனிதான் பயன்படுத்தப் போகிறீர்கள் எனில், ஈரத்தில் ரோமங்களை அகற்றுதல், உலர்ந்த பிறகு அகற்றுதல் என்ற இரண்டு வசதிகளும் கொண்ட ஒன்றை வாங்குவது நல்லது. இவற்றை நீங்கள் பாத் டப்பில் இருந்துகொண்டும் பயன்படுத்தலாம், ஷவரில் குளித்துக்கொண்டும் பயன்படுத்தலாம். இவற்றை குளித்துத் துடைத்த பிறகும் பயன்படுத்தலாம், இதனால் சருமத்தின் மீது எப்பிலேட்டர் தடையின்றி மென்மையாகச் செல்லும்!
உலர்ந்த பிறகு பயன்படுத்தும் எப்பிலேட்டர் பயன்படுத்துபவர்கள், வெதுவெதுப்பான நீரில் முதலில் குளித்துவிட வேண்டும், இதனால் தோலின் நுண்துளைகள் திறக்கும், ரோமங்களை அகற்றுவது எளிதாகும்.
இறந்த செல்களை அகற்றுதல் (Exfoliate)
ரோமங்களை அகற்றும் முன்பு இதை முக்கியமாகச் செய்ய வேண்டும். இறந்த செல்களை அகற்றும்போது, ரோமங்கள் உள்நோக்கி வளர்வதற்கான வாய்ப்பு குறையும். இதற்கு ஸ்க்ரப், லூஃபா எனப்படும் உடல் தேய்க்கும் ஸ்பாஞ்சு அல்லது ஸ்பா க்ளவுஸ் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். குளித்த பிறகு, சருமம் முற்றிலும் உலர்ந்திருக்க வேண்டும், அதன் பிறகே இறந்த செல்களை அகற்றும் செயலைச் செய்ய வேண்டும்.
சருமத்தை விரிவடையச் செய்தல் (Stretch the Skin)
கருவியின் அமைப்புகளை தேவையானபடி மாற்றிக்கொள்ளுதல் (Adjust the Settings)
கருவியை உங்கள் சருமத்திற்குப் பழக்குவதற்காக, ரோமங்களை அகற்றத் தொடங்கும் முன்பு, குறைந்த இயக்கத்தில் வைத்துப் பயன்படுத்துங்கள். சிறிது நேரம் கழித்து வேகமான இயக்கத்தில் பயன்படுத்தலாம்.
பிடித்துக்கொள்ளும் முறை (How to Hold)
தோலின் மீது அதிகம் அழுத்த வேண்டியதில்லை. தோலுக்கு நெருக்கமாக வைத்து, வட்ட வடிவில் லேசாக நகர்த்த வேண்டும். வேக்சிங் மற்றும் ஷேவிங் செய்யும்போது எப்படி ரோமங்களின் வளர்ச்சிக்கு எதிர்த்திசையில் செய்வீர்களோ, அதே போன்றே செய்ய வேண்டும். சருமத்திற்கு செங்குத்தாக இருக்கும் வகையில் கருவியைப் பிடித்துக்கொள்ள வேண்டும், அப்போதுதான் எல்லா ரோமங்களையும் அது பிடித்து அகற்ற வசதியாக இருக்கும். நேரம் அதிகமானாலும் பரவாயில்லை என்று, எல்லா ரோமங்களையும் அகற்றுங்கள்.
அகற்றிய பிறகு (Aftercare)
ரோமங்களை அகற்றிய பிறகு சருமத்தில் எரிச்சல் அல்லது வீக்கம் ஏற்பட்டால், ஐஸ் வைத்து லேசாக அப்பகுதிகளில் தேய்த்துக்கொள்ளலாம். சருமத்திற்கு இதமளிக்க கற்றாழை ஜெல் அல்லது மாய்ஸ்டுரைஸர் கிரீம் பயன்படுத்தலாம்.
இன்னும் சில உதவிக்குறிப்புகள்:
முன்பே கருவியை சார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும், இதனால் பாதியில் நின்றுவிடாமல் தவிர்க்கலாம்.
ரோமங்களை அகற்றிய பிறகு சருமம் சிவந்தால், இரவு உறங்கச் செல்லும் முன்பே செய்துகொள்ளலாம்.
இடைவேளை தேவைப்பட்டால் அல்லது பிளேடுகளைக் கழுவ வேண்டியிருந்தால் இடையில் சிறிது நேரம் நிறுத்திக்கொள்ளலாம்.
சௌகரியமாக செய்ய வேண்டும். வலியை கவனிக்காமல் மனதை திசைதிருப்ப நீங்கள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே கூட எப்பிலேட்டரைப் பயன்படுத்தலாம்.
பயன்படுத்த பிறகு எப்பிலேட்டரை சுத்தம் செய்து வைக்க வேண்டும்.
இனி எப்பிலேட்டரைப் பயன்படுத்தி வலி அதிகமின்றி, எளிதாக ரோமங்களை அகற்றிக்கொள்ள இந்தக் குறிப்புகள் உங்களுக்கு உதவும்! இனி ரோமங்களை அகற்றுவதற்காக ஒவ்வொரு முறையும் சலூனுக்கு செல்ல வேண்டியதில்லை! இதை நன்றாகப் பயன்படுத்திப் பழகிய பிறகு, வெளியே செல்லும்போது நீங்கள் எடுத்து வைத்துக்கொள்ளும் முதல் பொருள் எப்பிலேட்டராகத்தான் இருக்கும்!