13.06.2018 புதன்கிழமை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், வைகாசி மாதம் 30ம் திகதி, ரம்ஜான் 28ம் திகதி, 13.6.18 புதன்கிழமை, தேய்பிறை, அமாவாசை திதி இரவு 2:12 வரை; அதன் பின் பிரதமை திதி, ரோகிணி நட்சத்திரம் மாலை 5:18 வரை; அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், சித்தயோகம்.
நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
குளிகை : காலை 10:30–12:00 மணி
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : விசாகம், அனுஷம்
பொது : சிவன் வழிபாடு, சர்வ அமாவாசை, நதி கடல் நீராடல் சிறப்பு.
மேஷம் :
செயல்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர்.
ரிஷபம்:
குடும்பத்திலுள்ள சிரமமான சூழ்நிலை மாறும். எண்ணத்திலும், செயலிலும் புத்துணர்வு உண்டாகும். தொழிலில் தாராள லாபம் இருக்கும். கடன் தொல்லை மறையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி காண்பீர்கள்.
மிதுனம்:
சிக்கலான பணி கூட எளிதாக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். குடும்பத் தேவை குறைவின்றி நிறைவேறும். போட்டி பந்தயத்தில் வெற்றி பெற அனுகூலம் உண்டாகும்.
கடகம்:
முரண்பட்டவர்களிடம் இருந்து விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள நிலுவைப் பணியை நிறைவேற்றுவதால் சிரமம் குறையும். சீரான பணவரவு இருக்கும். பெண்கள் ஆடம்பரச் செலவு செய்ய நேரிடலாம்.
சிம்மம்:
சுறுசுறுப்புடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபார நடைமுறையில் குளறுபடி வந்து சரியாகும். லாபம் சுமார். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்கலாம். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.
கன்னி:
உற்சாகமுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்கும். லாபம் உயரும். சமூகத்தில் கூடுதல் கவுரவம் பெறுவீர்கள். உபரியாக பண வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.
துலாம்:
மற்றவர் கருத்தை பொருட்படுத்த வேண்டாம். அதிக உழைப்பு தொழில் வியாபாரத்தில் புதிய வளர்ச்சியை உண்டாக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். குடும்பத்தினர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். உடல்நிலை சீராகும்.
விருச்சிகம்:
எதிரிகளிடம் விலகுவது மிக நல்லது. தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றவும். வாகனத்தில் மிதவேகம் நல்லது. பிள்ளைகளால் உதவி உண்டு.
தனுசு:
குடும்ப பிரச்னையை பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். பெண்களுக்கு புதிய வழிகளில் செலவு அதிகரிக்கும். பிராணிகளிடம் விலகுவது நல்லது.
மகரம்:
பேச்சில் வசீகரத் தன்மை அதிகரிக்கும். புதியவரின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு மகிழ்வர்.
கும்பம்:
மனதில் தன்னம்பிக்கை நிறைந்திருக்கும். நல்லோரின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர தேவையான நவீன மாற்றம் செய்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.
மீனம் :
வெகுநாள் திட்டமிட்ட செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாக இருக்கும். தாராள பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறுவர்.