நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள் 8 பேர் கலந்துகொள்ளாததால் உபதவிசாளர் தெரிவு நேற்று நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நெடுந்தீவு பிரதேச சபைக்காக உப தவிசாளர் பதவி வெற்றிடத்துக்கு வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் மீண்டும் தெரிவு நடக்க இருந்தது.
ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் ஆறு உறுப்பினர்களும், சுயேச்சைக் குழு உறுப்பினர்கள் இருவரும் சமூகமளிக்காமையால் தெரிவு நடக்கவில்லை.
உள்ளுராட்சி சபை தேர்தலின் பின்னர் வடக்கில் பல சபைகள் தொங்கு நிலையில் காணப்பட்ட போது பலத்த போட்டிகளுக்கு மத்தியில் அரசியல் கட்சிகள் நிர்வாகத்தை கைப்பற்றியிருந்தன.
நெடுந்தீவு பிரதேச சபைக்கான தவிசாளர்,உப தவிசாளர் தெரிவில் பலத்த போட்டிக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது.