பாலிவுட்டில் 90-களில் கனவுக்கன்னியாக வளம் வந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் ஒரு பாடலுக்கும், பிரபுதேவா-வின் மிஸ்டர்.ரோமியோ படத்திலும் நடித்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வியான் குந்த்ரா என்ற ஒரு மகன் உள்ளார்.
விடுமுறை நாட்களில் அடிக்கடி வெளிநாடு பழக்கம் உள்ள இந்த தம்பதி அடிக்கடி தாங்கள் சுற்றுலா செல்லும் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். இந்நிலையில், சமீபத்தில் துபாய் -க்கு தனது குடும்பத்தாருடன் விசிட் அடித்தார் ஷில்பா.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை பின் தொடருபர்களின் எண்ணிக்கை 6 மில்லியனை தொட்டுள்ளது. இதனையடுத்து, தனது மகனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஷில்பா செட்டி குழந்தை போல ஹே..! தட்ஸ் அ சிக்ஸ்..! என கத்திக்கொண்டு தனக்கு 6 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருப்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே ஷில்பா செட்டிக்கு 43 வயதா..? இப்போதும் குழந்தை போல குறும்புத்தனமாக விளையாடுகிறாரே..!?! என்று கூறி வருகிறார்கள்.
// ]]>