நேற்று பிற்பகல் வேலை தாய் ஒருவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் வைத்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நன்னடத்தை முகாமில் உள்ள தனது குழந்தைக்கு இடம்பெறும் துன்புறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்திருந்த போதும் அதற்கு அதிகார சபையினால் எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என தெரிவித்து குறித்த தாய் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
24 வயதுடைய தாய் விஷம் அருந்திய பின் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளால் ஶ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும் , குறித்த தாய் ஶ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் இருந்து கலுபோவில போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் , அவரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.