ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்.
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?
நீரிழிவு உள்ளவங்க, சிறுநீரகக் கோளாறு உள்ளவங்க, சிகரெட் பழக்கமுள்ளவங்க, உடல் பருமனானவங்க, மொனோபாஸ் கடந்தவங்க, எப்போதும் டென்ஷனா இருக்கிறவங்க, எந்த வேலையும் செய்யாம உடல் இயக்கமே இல்லாதவங்க, ஏற்கனவே குடும்பத்துல யாருக்காவது இதய நோய்கள் இருக்கிறவங்க… இவங்க எல்லாம் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது.
இதய நோய்க்கான அறிகுறி நெஞ்சு வலியாதான் இருக்கணும்ணு அவசியமில்லை. அடிக்கடி தலைவலி, தலை சுற்றல், பார்வைத் தடுமாற்றம், ஞாபகமறதி, மூச்சு விடறதால சிரமம், தோள்பட்டை வலி…. இதுல எது இருந்தாலும், அது இதய நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்னு உடனே டாக்டரை பார்க்கிறது அவசியம்.
சிகிச்சை, உடற்பயிற்சி… இது எல்லாத்தையும் விட முக்கியம் உணவு. அமெரிக்கால எல்லா உணவுகள்லயும் “டிரான்ஸ்ஃபேட்”னு சொல்லப்படற அடர்த்தி குறைவான மிதக்கும் கொழுப்பு இருக்காங்கிறதை பேக்கிங் லேபிள்ல போடணும்னு சட்டம் இருக்கு. நம்மூர்ல அப்படி எதுவும் இல்லாதது பெரிய குறை. எதை சாப்பிடலாம், எது கூடாதுங்கிற விழிப்புணர்வு இல்லாம, கண்டதையும் சாப்பிட்டு நோய்களை விலை கொடுத்து வரவழைச்சுக்கறோம்.