வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்து விட்டால், அந்தக் குழந்தை தந்தையின் இறுதிச் சடங்கிற்கு உதவ மாட்டார் என்று பொதுவான பேச்சு இன்றும் மக்கள் மத்தியில் உள்ளது.
தந்தையின் இறுதிச் சடங்கிற்கு உதவ மாட்டார் என்பது அவரது பணம் அவர் தந்தைக்கு உதவாது என்பதாகும். ஏனெனில் அவர் தந்தை, அவரது இளம் வயதிலேயே காலமாகும் நிலை வருவதால், மகன் பொருளீட்டும் நிலையில் இருக்க மாட்டார் என்பதே ஆகும்.
வெள்ளிக்கிழமை பிறந்த ஆண் குழந்தைகள் அனைவருக்கும் இம்மாதிரி நிலை வராது. வெள்ளிக்கிழமை அன்று நவமி திதியில் பிறந்தவர்களுக்கு மட்டுமே இளம் வயதில் தந்தையை இழக்க வேண்டி வரும். வெள்ளிக்கிழமை நவமி திதியில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால், கீழ்க்கண்ட எளிய பரிகாரங்களைத் தாயார் செய்தால் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்.
வெள்ளிக்கிழமை நவமி திதியில் பிறந்த ஆண் குழந்தைக்கு ஒரு வயது முடிந்தவுடன் அந்தக் குழந்தையை உங்கள் குலதெய்வத்துக்கு அல்லது திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு எழுதி வைக்க வேண்டும்.
பிறகு அந்தக் குழந்தையை விலைகொடுத்து வாங்காமல், உங்கள் வீட்டிற்கு அழைத்து வந்துவிட வேண்டும். குழந்தை பெரியவனாகி திருமணம் முடிக்கும்வரை, எந்தக் கோவிலுக்கு எழுதி வைத்தீர்களோ அந்தக் கோவிலின் பெயராலேயே மற்ற கோவில்களில் அர்ச்சனை செய்ய வேண்டும். திருமணம் முடிக்கும் தருணம் வரும்போது, எழுதி வைத்த கோவிலுக்குச் சென்று,நீ வளர்த்து ஆளாக்கிய என் குழந்தையை உன்னிடம் விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறேன், என்று எழுதி வைத்து வரவேண்டும்.
இவ்வாறு செய்வதால், வெள்ளிக்கிழமை நவமி திதியில் பிறந்த குழந்தையின் தாயும் தீர்க்க சுமங்கலியாக இருப்பார். தந்தையும் ஆரோக்கியமாக வாழ்வார்.
சிலர் வெளிநாட்டில் வாழலாம். தொலைதூரத்தில் வாழலாம். அப்படிப்பட்டவர்கள் இருந்த இடத்திலிருந்தே உங்கள் குலதெய்வத்தை நினைத்து அல்லது திருச்செந்தூர் முருகனை நினைத்து, ‘வெள்ளிக்கிழமை நவமி திதியில் பிறந்த இந்தக் குழந்தையை நீயே முன்நின்று வளர்த்து என்னை தீர்க்க சுமங்கலியாக வாழ வைக்க வேண்டும்; என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
இருந்த இடத்திலேயே வேண்டுபவர்கள் குழந்தைக்குப் பெயர் சூட்டும்போது குலதெய்வப் பெயரையோ திருச்செந்தூர் முருகன் பெயரையோ சூட்டுங்கள். தீர்க்க சுமங்கலியாக வாழலாம். தந்தைக்கும் எதுவும் செய்யாது