Loading...
ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை (15) வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாயல் நிருவாகக் குழு உறுப்பினர்கள், அதன் பிறைக்குழு அங்கத்தவர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள், அதன் பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், ஏனைய பள்ளிவாயல்களின் நிருவாக சபை உறுப்பினர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
Loading...
மௌலவி ஜே. அப்துல் ஹமீது பஹ்ஜியின் தலைமையில் நடைபெறவுள்ள இப்பிறைக்குழுக் கூட்டத்தின் தீர்மானம் இலங்கை ஒலிபரப்புச் சேவை முஸ்லிம் நிகழ்ச்சியின் ஊடாக அறிவிக்கப்படவுள்ளது
Loading...