Loading...
ஹோமாகம நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து, தன்னை விடுதலை செய்யுமாறு கோரிய, கலகொட அத்தே ஞானசார தேரர் மேன்முறையீடு தாக்கல் செய்துள்ளார்.
மேலும், பிரதிவாதிகளின் விபரங்களை முறையாக ஆராயாமல் தவறான அடிப்படையில் தன்னை குற்றவாளியாக தீர்ப்பளித்துள்ளதாகவும் அவர் தனது மேன்முறையீட்டில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...
இந்த மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர் ஓரிரு தினங்களில் தண்டனையிலிருந்து விடுபட்டு விடுதலை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஞானசாரருக்கு நேற்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Loading...