தெலுங்கு திரையுலக நடிகைகளை அமெரிக்கா அழைத்து சென்று விபச்சாரிகள் என விளம்பரம் செய்து அவர்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த தயாரிப்பாளரும் மனைவியும் கையும் களவுமாக சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த கிஷன் என்பவர் தனது மனைவி சந்திரா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சிகாகோ நகரில் வசித்து வருகிறார்.
இவர் தெலுங்கு சினிமாவில் சில மெகா ஹிட் படங்களையும் தயாரித்துள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு தேடி போராடி வரும் நடிகைகளை அமெரிக்க கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பதாக அழைத்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார்.
இதற்காக வாடிக்கையாளர்களிடம் நாளொன்றுக்கு ரூ 2 லட்சம் வரை வசூல் செய்து உள்ளார். மேலும் இவரது மனைவி சந்திரா எந்தெந்த நடிகைகள் யார் யாருடன் உறவு வைத்து கொண்டார்கள் என ஓரு நோட்டில் குறித்து வைத்துள்ளார்.
தற்போது இந்த நோட் போலீசாரிடம் சிக்கியுள்ளது. மேலும் இவர்கள் இருவரும் ஜாமினில் வெளிவராதபடி கைது செய்யப்பட்டுள்ளனர்.