Loading...
பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றமே உத்தரவிட்ட பின்பும் தொடர்ச்சியாக எஸ்.வி சேகரை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது காவல்துறை. இதன் காரணமாக காவல்துறை கடுமையான கண்டனங்களை பெற்றுவருகிறது.
அதே சமயம், எஸ்.வி சேகரை கைது செய்யவிடாமல் தடுப்பது, காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுப்பது யார் என்ற கேள்வியும் பொதுமக்களுக்கு எழாமல் இல்லை.
Loading...
இந்த நிலையில், கைது செய்யப்பட வேண்டிய நபரான எஸ்.வி சேகர், போலீஸ் பாதுகாப்புடன் போண்டா திண்றுகொண்டு கொண்டு சுற்றுகிறான். என்ன செய்துகொண்டிருக்கிறது காவல்துறை என விளாசியுள்ளார் திமுக முன்னணி தலைவர்களுள் ஒருவரான ஆ.ராசா.
Loading...