நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே உள்ளன. அதன் தொடர்ச்சியாக பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது கேட்போரை அதிர்ச்சியடைய செய்திடும் ஓர் கொடூர சம்பவம்.
பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் நேற்றைய தினம் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தனர் ஓர் மருத்துவ பழகுநரும் அவரது மனைவியும், மகளும். அப்போது அவர்களை இடைமறித்த சுமார் 20 பேர் கொண்ட கும்பல் மருத்துவ பழகுனரை அங்கிருந்த மரத்தில் கட்டிவிட்டு அவரது மகளையும் – மனைவியையும் கூட்டாக வன்புணர்வு செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு செல்லக்கூடாது எனவும் அவர்களை எச்சரித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மருத்துவ பழகுநர் அளித்த புகாரின் காவல்துறை வழக்கு பதிவு செய்து 20 பேரை கைது செய்து விசாரித்து வருகிறது.
(மேற்கண்ட செய்தியில் தொடர்புடைய நபர்களின் பெயர்களை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடாமல் தவிர்த்துள்ளோம்)