ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் செயல்படும் தெரிக் இ தாலிபன் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் முல்லா பாஸல் உல்லா அமெரிக்க ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் உள்ள குனார் பகுதியில் தெரிக் இ தாலிபன் பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் தாலிபன் என்றழைக்கப்படும் இந்த இயக்கத்தின் தலைவனாக தற்போது இருக்கக்கூடிய முல்லா பாஸல் உல்லா வசிக்கும் இடத்தை குறிவைத்து நேற்று அமெரிக்க ராணுவம் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் முல்லா பாஸல் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட முல்லா பாஸல் தலைக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. பாகிஸ்தானின் பெஷாவரில் இருக்கும் ராணுவ பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு இந்த இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 151 மாணவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானிலும் இந்த இயக்கத்தினர் பல தாக்குதல்களை நடத்தி உள்ளனர்