Loading...
தெஹியோவிட்ட அடுலுகம சந்தியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்தார்.இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கரவனல்லையிலிருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற வேன் ஒன்று எதிரே வந்த காரொன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியது.
Loading...
விபத்துக்குள்ளான காரின் பின் பக்கம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதியது எனக் கூறப்பட்டது.
சம்பவத்தில் படுகாயமடைந்த வேனின் சாரதி கரவனல்லை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.
Loading...