நடிகை வேதிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற படங்களில் நடிக்கும் தென்னிந்திய நடிகையாவார்.
வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இதையடுத்து, பாலாவின் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பரதேசி என்னும் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.
இதைதொடர்ந்து, இவர் எராளமான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தற்போது உபேந்திரா நடிக்கும் ஹோம் மினிஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் கன்னடம் மற்றும் தெலுங்கில் ரிலீஸாக உள்ளது.
இதற்கிடையில், நடிகை வேதிகா தற்போது வெளிநாடிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அதன் வீடியோ மற்றும் புகைபடத்தை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அவர் உயரத்தில் இருக்கும் மொரீசியஸில் Casela பிரிட்ஜில் நடந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எப்படி இவர் தைரியமாக இதில் நடந்தார் என்று ஆச்சரியப்படுகின்றனர்.
I did it ?? 350metre #NepaleseBridge crossing #Casela #Bridgewalk Special thanks to Kennedy at #Casela without whom I wouldn’t have been able to cross it. #Mauritius #offmylist #Adventure #Extreme pic.twitter.com/QLj8XCa8YN
— Vedhika (@Vedhika4u) June 15, 2018