பிரபல மிமிக்கிரி ஆர்டிஸ்ட் நவீன் மலேசியாவைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவரை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக கூறப்பட்டதால், திவ்யலட்சுமி என்பவர் நவீன் முன்பே என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது என்னை ஏமாற்ற பார்க்கிறார் எனவும் கூறி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இதற்கு நவீன் அவரை எனக்கு தெரியும், ஆனால் நான் அவரை திருமணம் செய்யவில்லை என்றும், இதை சட்டப்படி சந்தித்து வருவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் திவ்யலட்சுமி, நாங்கள் இரண்டு பேரும் நேரில் சென்று தான் திருமண பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தோம்.
அதுமட்டுமின்றி திருமண பதிவு அலுவலகத்தில் இருக்கிற நோட்டில் கையெழுத்து, கைரேகை வெச்சிருக்கோம்.
அங்கு சிசிடிவி கமெராவும் இருந்தது, அதில் எங்கள் திருமணம் பதிவாகியிருக்கும். இதெல்லாம்தான் எங்கள் திருமணம் நடந்ததற்கு ஆதாரம்.
திருமணத்தின் போது பதிவு அலுவலகத்தில் நவீனின் போனில் தான் புகைப்படம் எடுத்தோம். ஆனால் அவர் அதை அனுப்பவே இல்லை.
நவீன் அவரோட தங்கச்சியோட திருமணத்திற்காக தன்னிடம் பணம் வாங்கினார், அதற்கான ஆதாரம் இருக்கு, இதுமட்டுமா, நவீனை விட்டுடு, உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் வாங்கிக்கோனு செல்லி அவங்க வீட்டு ஆளுங்க என்கிட்ட பேரம் பேசினார்கள் மிரட்டினார்கள்.
அப்போது தான் ஜுன் 10-ஆம் திகதி நவீனுக்கும் கிருஷ்ண குமாரிக்கும் திருமணம் நடக்கவிருப்பதா தகவல் கிடைத்தது, இதனால் 9-ஆம் திகதி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன், அதன் பின் பொலிசார் அவரை அழைத்து விசாரித்தனர்.
அப்போது நவீன் நான் விவாகரத்து வாங்கிவிட்டு கிருஷ்ண குமாரியை கல்யாணம் திருமணம் செய்து கொள்கிறேன் என்று எழுதிக் கொடுத்தார்.
ஆனால் 10-ஆம் திகதி இரண்டு பேரும் பிளான் பண்ண மாதிரி சென்னையில் திருமணம் செய்து கொள்ளாமல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள்.
அதற்கான புகைப்படமும் என்னிடம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.