பாணந்துறை – கொரகாபொல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மீது பாரவூர்தியொன்று மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் மேரியவத்தை – தொட்டுபொல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய பாரவூர்தியின் சாரதிக்கும் விபத்தில் உயிரிழந்த நபருக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை நிலவி வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலையும் இருவருக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் முச்சக்கரவண்டி பின்னால் வந்த பாரவூர்தியின் சாரதி இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனை மனித கொலை என கருத்தில் கொண்டு விசாரணைகள் இடம்பெறுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.