மீண்டும் பால்மா விலையை அதிகரிக்குமாறு பால்மா உற்பத்தி நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியுள்ளன.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தைகளில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளதால் பால்மா நிறுவனங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ கிராம் பால்மா விலையை 70 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபையின் பணிப்பாளர் டீ.ஜீவானந்த குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்னர் உலக சந்தையில் 3 ஆயிரத்து 250 டொலராக காணப்பட்ட ஒரு மெற்றிக் தொன் பால்மாவின் விலை தற்போது 3 ஆயிரத்து 450 டொலராக அதிகரித்துள்ளது.
இதனால் பால்மாவை இறக்குமதி செய்வதிலும், தமது தொழிலை முன்னெடுத்து செல்வதிலும் பல சிக்கல் நிலைகள் தோன்றியுள்ளதால் பால்மா உற்பத்தி நிறுவனங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.