இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது தமிழக அரசு தமது நிலைப்பாட்டை முன்வைக்கும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் 7 பேரையும் விடுதலை செய்யத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.
ரஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவருகின்றவர்களை விடுவிக்க தமிழக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மனு நேற்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தினால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.