பிரித்தானிய வரலாற்றிலேயே அதிக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இரண்டாம் எலிசபெத் மகாராணி, தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜெண்டினா உட்பட சில நாடுகளுக்கு மட்டும் சென்றதில்லை என்று கூறப்படுகிறது.
பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணி, தென் பசிபிக் தீவான வானாட்டு முதல் இஸ்லாமிய நாடான ஏமன் வரை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆனால், அவர் தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவுக்கு சென்றதில்லை. இதற்கு முக்கிய காரணம், 30 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய பாக்லாந்து போர் தான் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த 1982ஆம் ஆண்டு பிரித்தானியாவின் ஆதிக்கத்துக்கு உட்பட் பாக்லாந்து மீது, அர்ஜெண்டினா நாடு படையெடுத்தது. அதன் பின்னர் நடந்த போரில் பிரித்தானிய ராணுவத்தினர் 255 பேரும், அர்ஜெண்டினா ராணுவத்தினர் 655 பேரும், பாக்லாந்து தீவைச் சேர்ந்தவர்கள் 3 பேரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர், பிரித்தானிய அரசு அந்த தீவினை மீட்டெடுத்தது. எனினும், பாக்லாந்திற்கு உரிமை கொண்டாடி வரும் அர்ஜெண்டினா, அந்த தீவுக்கு ’மால்வினாஸ்’ என பெயரிட்டு அதிகாரப்பூர்வமாக அழைத்து வருகிறது.
இந்நிலையில் தான், இளவரசர் வில்லியம் கடந்த 2012ஆம் ஆண்டு பாக்லாந்து தீவில் 6 வாரங்கள் தங்கியிருந்தார். அப்போது அர்ஜெண்டினா மக்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 2013ஆம் ஆண்டு, பிரித்தானிய அரச குடும்பத்து வாரிசான இளவரசி Anne அர்ஜெண்டினாவுக்கு பயணம் செய்தார். 14 ஆண்டுகளுக்கு பின்னர், பிரித்தானிய அரச குடும்பத்து நபர் ஒருவர் அர்ஜெண்டினா சென்றது அதுவே முதல் முறையாகும்.
இதன் காரணமாக தான் இரண்டாம் எலிசபெத் மகாராணியும் அர்ஜெண்டினாவுக்கு இதுவரை செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவர் பெரு, கொலம்பியா, ஈக்குவடார், உருகுவே, பொலிவியா, சூரினாம், பராகுவே போன்ற நாடுகளுக்கும் சென்றதில்லை என்று கூறப்படுகிறது.