அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவுக்கு சீனா உரிமை கோரியுள்ள நிலையில் அரசாங்கம் அதிருப்தியடைந்துள்ளது. இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு அரசாங்கம் விஷேட குழு அமைத்துள்ளது .
அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைப்பதற்காக நிலப்பரப்பில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு, துறைமுகத்துக்கு வெளியே செயற்கைத் தீவு ஒன்று அமைக்கப்பட்டது.
50 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்பட்ட இந்த தீவு 110 ஹெக்ரெயர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதனை சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக பயன்படுத்த அரசாங்கம் உத்தேசித்திருந்தது. ஆனால் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தின் பிரகாரம் குறித்த செயற்கை தீவு தனக்கே உரித்துடையது என சீனா தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்திற்குள் செயற்கை தீவும் உள்ளடங்குவதால் அதனைத் ஒப்படைக்குமாறும் சீனா தொடர்ந்தும் வலியுறுத்திவருகிறது.
இதனால் அரசாங்கம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளது. தீவை ஒப்படைப்பதாயின் தென் மாகாணசபையின் ஒப்புதலை அரசாங்கம் பெற வேண்டும்.