பொதுவெளியில் சிலர் வாய் திறவாதவரையில் அவர்கள் குறித்த சித்தரிப்புகள் உயிர் பெற்றிருக்கும். ஆனால், பொதுவெளியில் வாய் திறந்ததன் பின்னே போலிகளின் முகமூடிகள் தானாகவே கிழிபட துவங்கிவிடும். அப்படியானதோர் நபர் தான் நடிகை கஸ்தூரி. இவர் தொடர்ச்சியாக சமூக – அரசியல் சிக்கல்கள் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இன்றி தெரிவித்துவரக்கூடிய கருத்துக்கள் சர்ச்சைகளை கிளப்பிவருவதுடன், அவருக்கு எதிரான எதிர்ப்பலைகளை கிளப்பிவருகின்றன.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவில் மூன்றாம் பாலினத்தவரை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பலைகளை கிளப்பியுள்ளன.
முன்னதாக, எஸ் – எஸ்டி வன்கொடுமை சட்டத்தினை நீர்த்துப்போக செய்திடும் வகையிலான மத்திய அரசின் போக்கினை கண்டிக்கும் வகையில் தலித் அமைப்புகளின் சார்பில் சென்னையில் நடைபெற்ற பேரணி குறித்து கஸ்தூரி சர்ச்சை கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.