வெகுநெரமாக தொடர்ந்து இயர்போன் அல்லது ஹெட்செட்டை பயன்படுத்தினால், காதின்உட்புறத்தில் இருக்கும் மெல்லிய சவ்வுகள், நரம்புகள் பாதிக்கப்பட்டு, காது கேட்கும் திறன் குறையத் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஹெட்செட்
ஹெட்செட்டை இன்றைய தலைமுறையினர் அதிகளவில் உபயோகிறார்கள். தனியாக பாடலை கேட்டு மகிழவும், மற்றவர்களிடம் உரையாடல் செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், அதிகமான சத்தத்துடன் பாடலைக் கேட்கும்போது பாதிப்புகள் அதிகரிக்கும். அத்துடன் வெகுநேரமாக இயர்போன் மற்றும் ஹெட்செட்டை தொடர்ந்து பயன்படுத்தினால், காதின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய சவ்வுகள், நரம்புகள் பாதிக்கப்படும்.
இதன் காரணமாக காதின் கேட்கும் திறன் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும். இறுதியில் காது கேளாமை வந்துவிடும் வாய்ப்பு உள்ளது.
அறிகுறிகள்
- காதில் தொடர் இரைச்சல் கேட்க தொடங்கும்.
- தூரத்தில் இருந்து வரும் சத்தம் கேட்காமல் போகும்.
- அருகில் எழும் சத்தம் கூட கேட்காமல் போகும்.
- காதில் மந்தமான நிலை உருவாகும். மற்றும் காது மரத்து போகும்.
பரிசோதனை செய்யும் முறைகள்
இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவரை அணுக வேண்டும். முதற்கட்டமாக அடிப்படையான சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
இதன் மூலமாக, காதின் உட்பகுதி, நடுப்பகுதி மற்றும் நரம்புகளில் பாதிப்புகள் உள்ளதா என்பது குறித்து கண்டறியப்படும்.
அதனைத் தொடர்ந்து, Audiological test, Audiogram போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு, கேட்கும் திறன் பாதிப்புகளும், காது கேளாமை திறன் பாதிப்புகளும் உறுதி செய்யப்படும்.
தீர்வுகள்
காது கேளாமை பாதிப்பு வந்தால் அதனை குணப்படுத்துவது கடினம் தான். நரம்பு மண்டலத்தில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதனை குணப்படுத்துவது மிகவும் கடினம்.
எனவே, மருத்துவரின் ஆலோசனைப்படி செவித்திறன் குறையாமல் இருக்கச் சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம். காது கேட்கும் கருவியை பயன்படுத்தலாம்