தமிழீழ செய்தி:விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் அண்மையில் சுவிஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதன்படி விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு இல்லை என்று சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம் அதிரடியாக அறிவித்து, சில புலி உறுப்பினர்களை விடுதலை செய்து அவர்களுக்கு நஷ்ட ஈடும் பெற்றுக்கொடுத்துள்ளது.
இவ்வாறு விடுதலைப்புலிகளின் அமைப்புக்கும், புலிகளின் ஆதரவாளர்களுக்கும் கிடைத்த இந்த மாபெரும் வெற்றிக்குப் பின் ஒரு மனிதர் இருக்கின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளரான குலம் என்பவரே அந்த தனி மனிதர்.
இந்த வழக்கு தொடர்ந்து நடைபெறுவதற்கும், சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்ததற்கும், இவருடைய பங்களிப்பு என்பது அளப்பரியதாகவே இருந்தது.