காதலுக்கும் கிரகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒருவரின் ஜாதகத்தில் குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் வெற்றி பெற்று திருமணத்தில் முடியுமா? அல்லது தோல்வியடையுமா?
திருமணத்திற்குப் பின்னரும் காதல் நீடிக்குமா? அல்லது விவாகரத்தில் முடியுமா? என்பதை தீர்மானம் செய்கிறது.
பெண்களை கவரும் ராசிக்காரர்கள்
ரிஷபம்
மிதுனம்
சிம்மம்
துலாம்
மகரம்
உண்மையான காதல் – ரிஷப ராசிக்காரர்கள்
காதலில் கை தேர்ந்தவர்கள் ரிஷப ராசிக்காரர்கள் என்றால் மிகையில்லை. காரணம் ரிஷபராசி வீட்டதிபதி சுக்கிரன். அழகான ஆடை… பேச்சில் ஸ்டைல், நடை , உடை, பாவனைகளில் ஒருவித கவர்ச்சி காணப்படும்.
எனவேதான் இந்த ராசிக்காரர்களை பெண்கள் எளிதில் விரும்புவார்களாம்.
இவர்களின் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். ரிஷப ராசிக்கார்ர்களின் காதல் கண்டிப்பாக வெற்றி பெறும். எனவேதான் ரிஷப ராசி ஆண்கள் அதிகம் காதல் வயப்படுகின்றனர்.
கற்பனை திறன் கொண்டவர் – மிதுன ராசிக்காரர்
மிதுன ராசிக்காரர்களின் அதிபதி புதன். கலைநயமும், கற்பனைத்திறமும் கொண்டவர்கள். தங்களை தாங்களே ரசிக்கும் குணமுடையவர்கள்.
புதன்தான் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை ஆள்பவர். ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாத தன்மை உடையவர் புதன்.
ஆண்மையின் உந்து சக்தியாக விளங்குபவர். ஆண் ஆண்மையுடன் இருக்கவும், பெண்ணிடம் பெண்மை இருப்பதற்கும் காரணம் இவரே. இவர்களின் ஆண்மை தன்மை பெண்களை எளிதில் கவரும்.
வீரம், தைரியம் – சிம்ம ராசிக்காரர்கள்
காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். சிம்ம ராசிக்காரர்கள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர்.
காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. சிம்மராசிக்கு அதிபதி சூரியன்.
சிறந்த புத்திசாலித்தனம் கொண்டவர்கள். தைரியம், ஆண்மை தன்மை கொண்ட இந்த ராசிக்காரர்களை பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.
அழகியல்வாதிகள் – துலாம் ராசிக்காரர்கள்
மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளது. காரணம் சுக்கிரனின் ஆட்சி வீடு இது. காதல் இவர்களுக்கு கை வந்த கலை. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும்.
ரொமாண்டிக் நாயகன். இவர்களின் நடை, உடை, பாவனை, பேச்சு என அனைத்திலும் அழகியல் நிரம்பி வழியும். எனவே இந்த ராசிக்காரர்களை பெண்கள் விரும்புகின்றனர்.
ஆத்மார்த்த நாயகர்கள் – மகர ராசிக்காரர்கள்
அன்பானவர்கள்,அசராதவர்கள், அடங்காதவர்கள். பெண்கள் மீது மாய்ந்து மாய்ந்து அன்பு செலுத்துவார்கள்.
மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களின் காதலுக்கு அதிக வலிமை உண்டு.
இவர்களின் அன்பில் கட்டுண்டே பெண்கள் இந்த ராசிக்காரர்களை அதிகம் விரும்புகிறார்களாம்