அர்ஜெண்டினாவில் 20 ஆண்டுகளாக நிர்வாணமாக சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணை பொலிசார் விடுவித்தனர்.
சுற்றிலும் மனிதக் கழிவு நிறைந்திருக்க, கட்டிலோடு சேர்த்து கட்டி வைக்கப்பட்டிருந்த Marisa Almiron (42) என்னும் அந்தப் பெண் செய்த தவறு இளம் வயதில் ஒருவரைக் காதலித்ததுதான்.
அவளது இளம் வயதில் அவளுக்கு ஒரு காதலன் இருந்ததற்காக அவளை அவளது தந்தை கட்டிலுடன் சேர்த்து சங்கிலியால் பிணைத்து வைத்தார்.
எட்டு ஆண்டுகளுக்குப்பின் அவர் இறந்த பின்னர் அந்தப் பெண்ணின் அண்ணன் அவளைத் தொடர்ந்து கட்டி வைத்துள்ளான்.
பல ஆண்டுகளாக அவள் அலறும் சத்தம் கேட்டதால் அண்டை வீட்டுக்காரர் ஒருவர் பொலிசாரிடம் புகார் கொடுத்ததன்பேரில் அவள் விடுவிக்கப்பட்டிருக்கிறாள். அவள் இப்போது மன நல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
அவளை கட்டி வைத்திருந்த அவளது அண்ணனோ அவளது குடும்பத்தார் யாருமோ இன்னும் கைது செய்யப்படவில்லை.