இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 7 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளைப் பறிப்பதற்கு நேற்றுத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் வலி.தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தி.பிரகாஷ; மற்றும் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் சதீஸ் ஆகியோர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மையச் செயற்குழு நேற்று முடிவெடுத்தது. எஞ்சிய 5 உறுப்பினர்களும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
உள்ளூராட்சி மன்றங்கள் கடந்த ஏப்பரல் மாதம் இயங்க ஆரம்பித்திருந்தன. கட்சியின் முடிவுகளை மீறி செயற்பட்டமை தொடர்பில் குறித்த உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையை மீளாய்வு செய்யவும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.