கிளிநொச்சியில் சலம் போவதானாலும் தங்களிடம் அனுமதி பெறவேண்டும் எனக்கூறி அச்சுறுத்தியிருக்கிறார்கள் முன்னாள் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முக்கியஸ்தர்கள்
சினிமாப்பாணியிலும் ஈ.பிடி.பி பாணியிலும் முன்னாள் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரின் முக்கியஸ்தர்கள் இரவு வேளையில் கடை ஒன்றினுள் புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது.
மேலும் சந்திரகுமார் மஹிந்தவின் நண்பராவார் இப்போதும் இவர்களுக்கிடையில் நட்பு இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த மாதம் 25 ஆம் திகதி கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியிலுள்ள மகிழ்ச்சி உணவகத்தினுள் இரவு வேளையில் சந்திரகுமாரின் முக்கியஸ்தரான பெரிய பரந்தன் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவரான சாந்தன் தலைமையிலான குழுவினர் சென்று புகைத்தலுக்கான போதைப் பொருளினை கேட்டிருக்கிறார்கள்.
அங்கு கடையிலே அவர்கள் கேட்ட புகைத்தல்ப்பொருள் இல்லை என்றதும் அவர்களை தாக்கும் பாணியிலே அவர்கள் செயற்பட்டிருக்கிறார்கள் தாம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரின் ஆட்கள் எனவும் கிளிநொச்சியில் சலம் போவது என்றாலும் தங்களின் அனுமதி பெறப்படவேண்டும் எனவும் அவர்கள் கடை உரிமையாளரை அச்சுறுத்தியிருக்கிறார்கள்.
தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அறிந்ததும் கடை உரிமையாளருடன் தொடர்பு கொண்டு தாங்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஆதரவாளர் என கூறியதாகவும் அதற்கு கடை உரிமையாளர் நான் அரசியல கட்சி சார்ந்தவன் இல்லை எனவும் கூறியுள்ளார்.
இவ்விடயத்தை வெளியில் கூற வேண்டாம் எனவும் சேதத்திற்கா பணத்தினை தான் தருவதாகவும் கூறியுள்ளார்.
இருந்தபோதும் கடை உரிமையாளர் குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் அலுவலகத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளதா கடை உரிமையாளர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்