இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து கட்சிக்கு நிதி சேர்ப்பதற்கு நேற்றைய மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பணம் வழங்கவேண்டும் என்று கட்சியின் மையக் குழுவில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு கட்சிக்குள் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகைக்குப் பணம் வழங்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. வேண்டுமனால் கட்சிக்கு நிதி வழங்கத் தயார். கட்சி அந்த நிதியைப் பயன்படுத்தட்டும் என்று உறுப்பினர்களால் யோசனை முன்வைக்கப்பட்டது. அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதற்கு அமைவாக, ஒவ்வொரு மாதமும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா 10 ஆயிரமும், மாகாண சபை உறுப்பினர்கள் தலா 5 ஆயிரமும், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தலா ஆயிரமும், உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள் தலா ஆயிரத்து 500 ரூபா வீதமும் செலுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.