குழந்தைகளின் முதல் நாயகன் அவர்களது தந்தை. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தந்தையர் தினத்தைப் பற்றி சில பிரபலங்கள் கூறிய மேற்கோள் வாக்கியங்கள் இதோ:
உலகுக்கு நீங்கள் தந்தை. குடும்பத்துக்கு நீங்களே உலகம்.
தந்தை என்பவர் ஒரு சாதாரண மனிதர். அவர் அன்பாலும், சாகசத்தாலும், கதை சொல்வதாலும் நாயகனாகப் பார்க்கப்படுபவர்.
தந்தை என்பவர் விளையாட மட்டும் சொல்லித் தருவதில்லை. சரியாக விளையாடவும் சொல்லித் தருபவர்.
தந்தை நமக்குக் கொடுக்கும் மிகப் பெரிய பரிசு, நம் மீது வைக்கும் நம்பிக்கை.
ஒரு தந்தையின் பாதுகாப்பைத் தவிர பிள்ளைப்பருவத்தில் தேவை என்று வெறெதுவும் கிடையாது.
தந்தை கப்பலும் அல்ல, கடலைக் கடக்க; நங்கூரமும் அல்ல நம்மை நிறுத்த; அவர் ஒரு கலங்கரை விளக்கம், வாழ்க்கைக்கு வழிகாட்ட.
‘என் தந்தை சொன்னது சரிதான்’ என்று ஒருவன் நினைக்கும் காலம் வரும்போது, பெரும்பாலும் அவனைத் தவறு என்று நினைக்க அவனுக்கு மகன் ஒருவன் இருப்பான்.
எவ்வளவு கோபித்துக் கொண்டாலும், அறிவுரை கூறினாலும், எந்த வயதாக இருந்தாலும் ஒரு தோழன் போல தோள்கொடுப்பவர் தந்தை; தந்தை துணையிருந்தால் வானம் வசப்படும்.