Loading...
யாழில் இளைஞன் மீது துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்யுமாறு மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸார் துப்பாக்கி சூட்டில் இளைஞன் கொல்லப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த மல்லாகம் மாவட்ட நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், நேரில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொது மக்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி, துப்பாக்கி சூடு நடத்திய சுன்னாகம் பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
Loading...
அத்துடன், சடலத்தையும் நேரில் விசாரணை செய்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் ஸ்ரீலங்கா பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Loading...