ஸ்ரீலங்காவிலுள்ள சிங்கள பௌத்தபேரினவாத அமைப்புக்களில் ஒன்றான பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானாசாரதேரரின் பௌத்த துறவி நிலை பறிபோகும் ஆபத்து எழுந்துள்ளதாக பௌத்த பிக்குகள் அச்சம்வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைவாசம்அனுபவித்துவரும் ஞானாசார தேரரின் காவியுடை அகற்றப்பட்டு ஏனைய சிறைக்கைதிகளைப் போல்கட்டை காற்சட்டை அணிந்திருப்பதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பௌத்த பிக்குகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
பௌத்தபிக்கு ஒருவர் காவியுடையை இன்றி ஏழு இரவு பொழுதுகள்தொடர்ச்சியாக இருப்பாரானால் அவரது பௌத்த துறவி நிலை இழக்கப்படும் என்று பௌத்த தர்மத்தின்துறவிகளுக்கான ஒழுக்கக் கோவை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் எளிய என்ற அமைப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ஸ்ரீலங்காவின் பாலி மற்றும் பௌத்தபல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்சுட்டிக்காட்டியுள்ளார்.