Loading...
மட்டக்களப்பு ஏறாவூரில் மயங்கிக் கிடந்த இளைஞனொருவர் மீட்டெடுக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் பாடசாலை வீதியைச் சேர்ந்த முஹம்மது அக்ரம் (வயது 16) என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
Loading...
இந்த இளைஞர் அநாதரவான நிலையில் மயக்கமுற்று வீதியில் கிடப்பதை அவதானித்த மனிதாபிமானியொருவர் அவரை உடனடியாக முச்சக்கரவண்டியொன்றில் ஏற்றி வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளார்.
என்ன காரணத்தினால் இவர் வீதியில் மயக்கமுற்ற நிலையில் வீழ்ந்து கிடந்தார் என்பது குறித்து அவர் நினைவு திரும்பியதும் அறிந்து கொள்ளப் போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Loading...