விஜய் தொலைக்காட்சியில் கலக்கபோவது யாரு, நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தவர் நடிகர் தாடி பாலாஜி.
இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்துள்ளார். அறிமுக விழாவில் பேசிய அவர் “நான் என் மனைவியுடன் திரும்ப சேரவேண்டும் என்கிற ஒரு ஆசையில் தான் வந்துள்ளேன்” என கூறி கண்கலங்கினார்.
ஆனால் அவருக்கு பிறகு போட்டியாளராக அரங்கத்திற்கு வந்த நித்யா பாலாஜி “நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் கிடைக்கும் பணத்திற்காக கலந்துகொண்டுள்ளேன். அதை பல்வேறு நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துவேன் என அவர் கூறினார். பாலாஜி பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
மேலும் வீட்டுக்கு உள்ளே சென்றபிறகு அவர் மற்றவர்களுக்கு கைகொடுத்து வணக்கம் கூறினார், ஆனால் பாலாஜியை கண்டுகொள்ளவே இல்லை.