இஸ்தான்புல் டாக்சி ஓட்டுநர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து துருக்கியில் உபேர் கால் டாக்சிக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
17,000 டாக்சி ஓட்டுநர்கள் உபேருக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து துருக்கி அதிபர் Erdogan உபேர் கால் டாக்சிக்கு தடை விதித்துள்ளார்.
இஸ்தான்புல்லின் எல்லோ டாக்சி என்னும் நிறுவனத்தின் ஓட்டுநர்கள் உபேர் கால் டாக்சி தடை செய்யப்பட வேண்டும் என பல பிரச்சாரங்களை மேற்கொண்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உபேர் கால் டாக்சியினால் தங்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எல்லோ டாக்சி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள்.
உபேரோ, முபேரோ, திடீரென முளைத்த இந்த விடயம் அவ்வளவுதான், இந்தப் பிரச்சினை முடிந்தது என்று துருக்கி அதிபர் Erdogan கூறினார்.
உபேர் சில ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருந்தாலும் துருக்கி வித்தியாசமானது என அவர் மேலும் தெரிவித்தார்.