Loading...
பிரித்தானியாவின் Cornwall பகுதியில் அமைந்துள்ள blowhole எனப்படும் மலை குழிக்குள் விழுந்த 16 வயது சிறுவனை மீட்பு குழுவினர் போராடி மீட்டுள்ளனர்.
சிறுவன் ஒருவன் குழியில் விழுந்து விட்டதாக தகவல் வந்ததையடுத்து நள்ளிரவு 1.00 மணியளவில் மீட்புக் குழுவினர் அச்சிறுவனை மீட்டு ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தேர்வு முடிவுகளைக் கொண்டாடுவதற்காக சிறுவர்கள் அங்கு சென்ற நிலையில் அந்த சிறுவன் குழிக்குள் தவறி விழுந்ததாக தெரிகிறது.
Loading...
மீட்பு நடவடிக்கைகள் சிக்கலாக இருந்தபோதிலும் சிறுவனுக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
பலத்த அலைகள் நீர் அழுத்தத்தை ஏற்படுத்தி மலை முகட்டில் உள்ள ஒரு துளை வழியாக வெளியேறுவதால் பெரிதாகும் துளையே blowhole ஆகும்.
Loading...