யாழ் நெடுந்தீவுப்பிரசேத்தில் சுமார் 400 இற்கும் மேற்பட்ட சிறார்கள் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படும் நெடுந்தீவு கடற்பகுதிகளில் பிடிக்கப்படுகின்ற கடலுணவுகள் உடனடியாகவே வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றமை மற்றும் தோட்டச்செய்கைகள் இலைக்கறி வகைகளின் உற்பத்திகள் மேற்கொள்ளப்படாமை.
உழுந்து பயறு கௌபி போன்ற அவரையினப்பயிர்களின் உற்பத்தியின்மை போன்ற காரணங்களால் நெடுந்தீவு பிரதேசத்தில் கீரைவகைகள் கிழக்கு வகைகள் தானிய வகை இல்லாத நிலை காணப்படுவதுடன், இவற்றை நெடுந்தீவுக்கு வெளியே யாழ்ப்பாணத்தில் அல்லது வேறு பிரதேசங்களில் பணத்தை செலவு செய்து பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் இதனால் நெடுந்தீவு பிரதேசத்தில் தொடர்ந்தும் போசாக்கு மந்த நிலமை காணப்படுகின்றது என பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் போசாக்கு குறைபாடான சிறுவர்கள் அதிகளவில் காணப்பட்டாலும் அந்த நிலமை தற்போது மாறியுள்ள போதும், சுமார் 400 இற்கும் மேற்பட்ட சிறார்கள் போசாக்கு மந்த நிலையில் காணப்படுவதாக பல்வேறு தரப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.