விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட 13 பேரையும் விடுதலை செய்து சுவிட்சர்லாந்து கோர்ட்டு உத்தரவிட்டது.
பெர்ன்:
இலங்கையில் தனி நாடு கேட்டு போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சுவிட்சர்லாந்தை சேர்ந்த 13 பேர் நிதி உதவி அளித்ததாக அவர்கள் மீது சுவிட்சர்லாந்து அரசாங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த சுவிஸ் பெடரல் கிரிமினல் கோர்ட்டு, விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் நிதி உதவி செய்தவர்களுக்கும் இடையே பாரம்பரிய ரீதியான தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. மேலும் விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு என்பதற்கான போதிய ஆதாரம் இல்லை என்றும் தெரிவித்தது.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் 8 பேர் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர். மற்ற 5 பேர் மீது மோசடியில் ஈடுபட்டதாக மட்டுமே குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட 13 பேரையும் விடுதலை செய்து சுவிட்சர்லாந்து கோர்ட்டு உத்தரவிட்டது