பிரதான செய்திகள்:போதுமான வளங்கள் இல்லாதே காரணத்தினாலேயே பொறுப்பு கூறல் பொறிமுறையை விடயத்தில் இலங்கை அரசை ஐ.நா. வினால் நிர்பந்திக்க முடியாமல் இருப்பதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
இன்று நோர்வையின் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஐ.நா. இலங்கை விடயத்தில் ஏன் தோல்வியை சந்திக்கவேண்டி ஏட்பட்டது… இலங்கை விடயத்தில் ஏன் இதுவரை சரியான பொறுப்புக்கூறல் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தமிழ் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே ஐ.நா. செயலாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார்.
நாடுகளுக்கு பொறுப்புக்கள் இருக்கின்றன. சர்வதேச சட்டங்களை ஏற்று கடைபிடிக்கவேண்டிய பொறுப்புக்கள் அவற்றிட்கு இருக்கின்றன. அனல் அதனை இலங்கை செய்யவில்லை. வளப்பற்றாக்குறைகள் காரணமாக ஐ.நா.வினாலும் அதனை சரியானமுறையில் செய்ய முடியவில்லை. இந்த விடயம் பற்றி நங்கள் ஆராய்ந்து எங்களது அணுகுமுறைகளை மாற்றி வருகிறோம்.
இன அழிப்பு, யுத்த குற்றங்கள், மனிதத்திற்கு ஏதிரான குற்றங்கள் போன்றனவற்றிக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் பொறிமுறை இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார் .
தமிழர் பிரச்சனை பற்றிய அவரது பதிலின் போது அவர் உணர்ச்சிவசப்பட்டதாகவும், கண் கலங்கியதாகவும் நிகழ்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்தார்கள்.