Loading...
பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி மகா சங்கத்தினர் நேற்று (20) கொழும்பு புறக்கோட்டை விகாரைக்கு முன்னால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தனர்.
இதில் தேரர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Loading...
இந்த அரசாங்கம் கை வைத்துள்ளது ஞானசார தேரர் மீதல்ல, முழு மகா சங்கத்தினர் மீதுமாகும் என்ற கருத்திலான வாசகங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களினால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தினால் பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் இறுதியில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு, ஞானசார தேரருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...