பாலியல் குற்றச்சாட்டில் ஈடு பட்டதாக வைத்தியர் மீது பெண்ணொருவரால் பொலிசில் முறைப்பாடு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா நெளுக்குளம் பகுதியில் தனியார் மருத்துவ நிலையம் நடாத்தும் வைத்தியர் ஒருவரே குறித்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.
இது தொடர்பாக தெரியவருகையில்
வவுனியா நகரப்பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வுகூட நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 22 வயதுடை பெண் ஒருவர் நெளுக்குளம் பகுதியில் உள்ள குறித்த வைத்தியரின் வைத்தியநிலையத்துக்கு மருத்துவ அறிக்கைகள் கொடுப்பதற்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் வைத்தியர் அப்பெண் மீது தவறாக நடக்க முற்பட்டதை சுதாகரித்துகொண்ட பெண் அங்கிருந்து வெளியேறி வீட்டிற்கு சென்றுள்ளார், எனினும் வீட்டில் இது தொடர்பாக கூறவில்லை, எனினும் வைத்தியர் மீண்டும் தொலைபேசி மூலம் இடைஞ்சல் குடுத்தகாரணத்தால் வவுனியா பொலிஸ் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளார்.
முறைப்பாட்டிற்கு அமைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக குறித்த வைத்தியரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பை ஏற்படுத்த முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.