பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஓவியா, முதல் சீசனின் டைட்டில் வின்னராக வர வேண்டிய ஓவியா ஆரவ் மீது காதல் வயப்பட்டு அந்த காதல் தோல்வியால் மனமுடைந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இதனால் ரசிகர்கள் ஆரவ் மீது கடுமையான கோபத்தில் இருந்து வந்தனர். ஆனால் ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் ஆரவ்வுடன் தொடர்பிலேயே இருந்து வந்தார், அதற்கு ஆதாரமாக ஒரு சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் தற்போதும் ரசிகை ஒருவர் பிக் பாஸின் முதல் சீசனில் புகழ் பெற்ற ஓவியா ஆரவ்வை மிஸ் செய்வதாக கூறி ட்வீட் செய்திருந்தார். இதனை பார்த்த ஓவியா ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் மீண்டும் அந்த சீட்டிங் ஆரவ்விடம் ஏமார்ந்து விடாதீர்கள் என எச்சரித்து வருகின்றனர், ஒரு சிலர் நாங்க தான் முட்டாளா என ஓவியாவை விமர்சனம் செய்தும் வருகின்றனர். பலர் ஓவியா ஆரவ் இடையே மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாக கூறி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மை என்ன என்பது ஓவியாவோ ஆரவ்வோ வாய் திறந்து கூறினால் தான் தெரிய வரும்.