சின்னத்திரையில் புதியதாக அறிமுகமான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற சுயம்வரம் நிகழ்ச்சியின் மூலம் ஆர்யா திருமணத்திற்கு பெண் தேடினார்.
16 பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் அபர்ணதி மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேர்ந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல இணையதள பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் எந்த நடிகர் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என கேள்வி எழுப்பி இருந்தனர்.
அதற்கு அபர்ணதி சற்றும் யோசிக்காமல் சிம்பு என கூறியுள்ளார். மேலும் சிம்பு ஸ்ட்ரைட் பார்வேர்ட், எதையும் ஓப்பனா சொல்லிடுவாரு சோ அவர் போனா நிகழ்ச்சி நல்லா இருக்கும் என கூறியுள்ளார். அபர்னதி சொல்ற மாதிரி சிம்பு போனா எப்படி இருக்கும் ரசிகர்களே?