கருப்பு உளுந்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கருப்பு உளுந்து, கருப்பட்டி சேர்த்து சத்து நிறைந்த களி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
கருப்பு உளுந்து கருப்பட்டி களி
தேவையான பொருட்கள் :
கருப்பு உளுந்து – ஒரு கப்,
கருப்பட்டித்தூள் – ஒரு கப்,
தேங்காய்த் துருவல் – கால் கப்,
நல்லெண்ணெய் – கால் கப்,
பச்சரிசி – 3 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – சிட்டிகை.
செய்முறை :
வெறும் வாணலியில் உளுந்து, அரிசியை தனித்தனியாக சேர்த்து வறுத்து ஆற விடவும்.
பிறகு மிக்சியில் நைசாக அரைத்து சலிக்கவும்.
கருப்பட்டியுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி விட்டு கரைத்து வடிகட்டவும்.
உளுத்த மாவுடன் தண்ணீர், கருப்பட்டி கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து சிறு தீயில் கிளறவும்.
அதனுடன் நல்லெண்ணெய் விட்டு கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது கிளறி இறக்கவும்.
சத்து நிறைந்த கருப்பு உளுந்து கருப்பட்டி களி ரெடி.