Facebookற்குச் சொந்தமான சமூக வலைத்தளமான Instagram நேற்று முதல் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் பயனீட்டாளர்கள் அதிகபட்சமாக ஒரு மணி நேரக் காணொளியைப் பதிவேற்றம் செய்யலாம்.
மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் YouTubeக்குப் போட்டியாக புதிய செயலி உருவாகலாம்.
‘IGTV’ என்ற பெயரைக் கொண்டுள்ள அச்செயலியில், இணையப் பிரபலங்களிடமிருந்தும், கலைஞர்களிடமிருந்தும் காணொளிகளை எதிர்பார்க்கலாம். அவர்களில் சிலருக்கு 10 மில்லியனுக்கும் மேலான ரசிகர்கள் உள்ளனர்.
இளையர்கள் ஐந்து ஆண்டுக்கு முன் இருந்ததைவிட, தற்போது 40 விழுக்காடு குறைவாகவே தொலைக்காட்சி பார்க்கின்றனர் என Instagramஇன் தலைமை நிர்வாகி Kevin Systrom கூறியுள்ளார்.
2010இல் புகைப்படம் பகிர்ந்துகொள்ளும் செயலியாக அறிமுகப்படுத்தப்பட்ட Instagram இன்று ஒரு பில்லியன் பயனீட்டாளர்களைக் கொண்டுள்ளது.
IGTVஐ, ஒரு தனிச் செயலியாகவும் Instagram செயலியின் மூலமும் பயன்படுத்தலாம்.